நீராவி இன்ஜினுக்கு புத்துயிர் : மலை ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை குன்னுார்: 'குன்னுாரில் நிறுத்தப்பட்டுள்ள, நுாற்றாண்டு பழமையான நீராவி இன்ஜினை, சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் இயக்க வேண்டும்' என, மலை ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுாற்றாண்டை கடந்த நீலகிரி மலை ரயிலுக்கு, 'யுனெஸ்கோ' அமைப்பு, பாரம்பரிய அந்தஸ்து வழங்கி கவுரவித்துள்ளது. இந்த ரயிலில், நிலக்கரியை எரிபொருளாக கொண்டு, நீராவியால் இயக்கப்படும் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
அடிக்கடி ஏற்பட்ட கோளாறு காரணமாக, படிப்படியாக, பர்னஸ் ஆயில் எரிபொருளால் இயக்கப்படும் இன்ஜின்களாக அவை மாற்றப்பட்டன. இதில், 1914ல் வடிவமைக்கப்பட்ட இன்ஜின், நுாறாண்டு கடந்தும் நல்ல நிலையில், பயன்பாடின்றி, குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து,...
more... ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'அவ்வப்போது, 'கூட்ஸ்' இழுத்து செல்ல மட்டும், இந்த இன்ஜின் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பெட்டிகள இழுக்கும் இழுவை திறன் உள்ளது' என்றனர்.
மலை ரயில் ஆர்வலர் ராஜ்குமார் கூறியதாவது: ஊட்டி பாரம்பரிய மலை ரயிலில், உலகளாவிய சுற்றுலா பயணிகள், அதிகம் விரும்பி பயணம் செய்கின்றனர். தற்போது, மேட்டுப்பாளையம் --- குன்னுார் வரையில், பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி இன்ஜின், மூன்று பெட்டிகளை மட்டுமே இழுக்கும் இழுவை திறன் கொண்டுள்ளது. நிலக்கரி பயன்படுத்தப்படும் நீராவி இன்ஜின் மூலம், முன்பு நான்கு பெட்டிகள் வரை இயக்க முடியும். நிலக்கரியிலான இன்ஜினை முழுமையாக சீரமைத்து, ஊட்டி - குன்னுார் இடையே இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம், கேத்தி பகுதிகளில், பழமைவாய்ந்த ரயில் பெட்டிகளை காட்சி பொருளாக வைத்து, பாரம்பரிய சின்னம் குறித்து, சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.