கரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமான நாடு முழுவதும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நோய்த்தொற்று குறைந்ததையடுத்து முன்பதிவில்லா பெட்டிகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து...
more... தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில்,
"ரயில்களில் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும். முதற்கட்டமாக 23 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும்.
ராமேஸ்வரம் - திருச்சி, திருச்சி - ராமேஸ்வரம், சென்னை - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சென்னை, பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு டவுன், கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், நாகர்கோவில் - கோட்டயம், கோட்டயம் - நாகர்கோவில், கோவை - மங்களூர், மங்களூர் - கோவை, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர்கோவில், திருச்சி - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - திருச்சி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும்."